2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்வெட்டு !

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உன்னிச்சைக் குளத்தின் நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில்  மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் நடைபெறுமென   தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு அலுவலகம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்   மறு அறிவித்தல்வரை தினமும் நீர்வெட்டு அமுலாகுமெனவும்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுழற்சி முறையில்  நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பிரகாரம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காலை 10 மணி முதல் மாலை 4மணி வரையும், இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4மணி வரையும், செங்கலடி மற்றும் வாழைச் சேனை ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் காலை 10 மணி முதல் மாலை 4மணி வரையும், இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5மணி வரையும், ஏறாவூர்ப் பிரதேசத்தில் காலை 10 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் பின்னர், இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணிவரையும், ஆரையம்பதி பிரதேசத்தில் காலை 10 மணி முதல் மாலை 4மணி வரையும், இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5மணி வரையும் காத்தான்குடிப் பிரதேசத்தில் காலை 9மணி முதல் பகள் 11மணிவரையும்,  பகல்  1மணியிலிருந்து மாலை 6மணி வரைக்கும், இரவு 10 மணியிலிருந்து காலை 6மணி வரைக்கும், கல்லடிப் பிரதேசத்தில் காலை 9மணி முதல் பகல் 12 மணி வரைக்கும், இரவு 10 மணியிலிருந்து காலை 6மணி வரைக்கும்.
 இருதயபுரம் பிரதேசத்தில் காலை காலை 8மணியிலிருந்து மாலை 5மணி வரையும், இரவு 10மணியிலிருந்து காலை 4மணி வரையும் நீர் வெட்டு அமுல் படுத்தப்படுமென மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .