Editorial / 2019 ஜனவரி 10 , பி.ப. 02:05 - 2 - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்
204 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் இலங்கையின் முதலாவது ஆங்கிலப் பாடசாலையுமான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, இதுவரையில் மாகாணப் பாடசாலையாகவே காணப்படுகின்றது.
எனினும், முன்னாள் பழைய மாணவர் சங்கத்தலைவரும் முன்பள்ளி பாடசாலை பணியகத்தின் செயலாற்றுப் பணிப்பாளருமான எஸ்.சசிகரனின் முயற்சியால், இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றியமைக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம அனுமதியளித்திருந்தார்.
மாகாணத்திலிருந்து இப்பாடசாலையை விடுவித்தும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான உத்தியோகபூர்வமான அனுமதியை, கடந்த 2018.12.29 அன்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் வழங்கியிருந்தார்.
மேற்படி உத்தியோகபூர்வமான அனுமதிக் கடிதத்தை, முன்னாள் பழைய மாணவர்சங்கத் தலைவர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் இராசதுரை பாஸ்கரிடம் இன்று (10) கையளித்தார்.
இந்நிகழ்வில் பழைய மாணவர்சங்கத் தலைவர் வீ.தர்சன், செயலாளரும் வைத்தியக் கலாநிதியுமான நவரெட்ணம் மௌலீசன், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எந்திரி வை.கோபிநாத், பிரதியதிபர்களான எஸ்.சதீஸ்வரன், இ.இலங்கேஸ்வரன், பழையமாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
2 hours ago
2 hours ago
4 hours ago
S.Ravithevan Friday, 11 January 2019 03:04 PM
மகிழ்ச்சி. பெயரளவில் மட்டும் அல்ல கல்வித்தரமும் உயர சம்பந்தப்பட்டவர்கள் உழைக்கவேண்டும். முதல் ஆங்கில பாடசாலையில் எத்தனை bi lingual மாணவர்கள் கற்கிறார்கள்
Reply : 0 0
K.G.Senthan Friday, 11 January 2019 04:12 PM
I was happy
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago