Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மார்ச் 29 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு விமான நிலையத்தை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று, பொதுமக்கள் பார்வையிட முடியுமென, மட்டக்களப்பு விமான நிலையத்தின் முகாமையாளர் சிந்தக்க பென்சேகா தெரிவித்தார்.
மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு, கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்த விமான நிலையத்தை, பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விமான நிலையத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை பொதுமக்கள் பார்வையிட முடியுமென, அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோன்று பாடசாலை மாணவர்கள் ,மட்டக்களப்பு விமான நிலையத்தைப் பார்வையிட வேண்டுமாயின் 0654549966 அல்லது 0765577669 எனும் இலக்கத்துக்கு பாடசாலை அதிபர் ஊடாகத் தொடர்புகொண்டு அனுமதியைப் பெற்று பார்வையிட வரமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
59 minute ago
3 hours ago