2025 மே 22, வியாழக்கிழமை

மட்டக்களப்புக்கு சந்திரிகா விஜயம்

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்

முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மட்டக்களப்புக்கு நாளை மறுதினம் (21)விஜயம் செய்யவுள்ளாரென, அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் அவர், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குளுவினமடு இடம்பெறும் பிரதான நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சரோஜினிதேவி சார்ள்ஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் சகல திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், பயனாளிகள் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமூக, பொருளாதார மேம்பாட்டுத்திட்டப் பணிகளைப் பார்வையிடுவதுடன், செங்கல் உற்பத்தித் தொழிலுக்கான உபகரணங்கள் என்பவற்றோடு, ஆடுகளையும் வாழ்வாதாரத் தொழிலுக்காக வழங்கி வைக்கவுள்ளார்.

மேலும், நிகழ்வுகளில் அவர், பயனாளிகளுடன் கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட நீறுபோட்டசேனை குளத்தை, விவசாய அமைப்புகளிடம் கையளிக்கும் வைபவமும், அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

மேலும், மாவடிமுன்மாரி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று நிலையத் திறப்பு விழாவிலும் அவர் கலந்தகொள்ளவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .