Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூலை 16 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையாவை, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரோஹித போகொல்லாகம சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஆயர் இல்லத்தில் சனிக்கிழமை (15) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளமை மற்றும் இங்கு கல்விச் செயற்பாட்டில் முன்னேற்றம் காணப்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இவற்றை முழுமையான அர்ப்பணிப்புடன் தான் செய்யவுள்ளதாக புதிய ஆளுநர் தெரிவித்தார்.
இம்மாகாணத்தில் அதிகளவில் காணப்படும் கத்தோலிக்கப் பாடசாலைகள் தொடர்பிலும் கவனத்திற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தை மேம்படுத்திய வகையில் மாகாணமாக உருவாக்க பணியாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர், தனது செயற்பாடுகளில் தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனக் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .