Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கும்புறுமூலையில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்ட காணியை, இராணுவத்துக்கு வழங்க எடுக்கப்படும் முயற்சியை உடன் கைவிடுமாறு, தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமாருக்கு இன்று (23) அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடித்திலேயே, இக்கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
“மட்டக்களப்பு மாவட்டத்தில், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள, கும்புறுமூலை முற்சந்தியின் அருகில் முன்னர் ஸ்தாபிக்கப்பட்டு, யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட அரச அச்சகக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்ட காணியுள்ளது.
“அக்காணியை, கிழக்கு மாகாண காணி ஆணையாளர், இராணுவத்துக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிகின்றேன்.
“எனினும், இக்காணியில் எதிர்காலத்தில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் உட்பட தொழில் பேட்டைகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாலும், இக்காணியிலோ அல்லது இதற்கு அருகாமையிலோ இராணுவ முகாம் அமைக்கும் திட்டத்துக்கான காணியை வழங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இதற்கான பதிலையும் நடவடிக்கைகளையும் கோருகின்றேன்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், மாகாண காணி ஆணையாளர், கோறளைப்பற்று பிரதேச செயலாளர், கிரான் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும், கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
36 minute ago
37 minute ago