Princiya Dixci / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன், ஜவ்பர்கான்
கைதிகள் தினத்தையொட்டி, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து ஒரு பெண் உட்பட 29 கைதிகள் நேற்று (11) விடுதலை செய்யப்பட்டனர்.
சிறிய குற்றங்களுக்காக சிறைத் தண்டனை பெற்று வந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம அத்தியட்சகர் என்.பிரபாரன் முன்னிலையில் இந்தக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதில் பிரதம ஜெயிலர் மோகன் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், நலன்புரி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .