2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் நிவாரணம்

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கொரோனா அசாதாரண நிலை காரணமாக, தொழில்வாய்ப்புகளை இழந்த மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மிகுந்த வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு, மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக நிவாரண உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன.

மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை கிராமத்திலுள்ள குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக மூன்றாம் கட்ட நிவாரணம், நேற்று (16) மாலை வழங்கப்பட்டது.

முறுத்தானை கிராமத்தில் வசித்து வரும் 75 குடும்பங்களுக்கு தலா 1,000 ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகள், இதன்பொது வழங்கப்பட்டன.

இதற்கான நிதியுதவிகளை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வல்வை 21 நண்பர்கள் அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில், மேற்படி ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் செ.நிலாந்தன்,  ஊடகவியலாளர்களான கு.சுபோஜன், ந.நித்தியானந்தன், கிராம சேவையாளர் சண்முகம் குரு, அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .