Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், எஸ்.சபேசன்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தின் டெங்குக் கட்டுப்பாடுக் குழுவினரும் பூச்சியல் ஆய்வுக்குழுவும் சேர்ந்து, மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் உள்ள பாடசாலைகள் முழுவதிலும், நேற்று (6) முதல் டெங்கு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் உள்ள 64 பாடசாலைகளில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தின் பூச்சியல் ஆய்வாளர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பாடசாலைகளில் உள்ள மலசலகூடங்கள், கிணறுகள், தண்ணீர்த் தாங்கிகள், பீலிகள், நீர்தேங்கும் இடங்களைச் சோதனை செய்து, அங்கிருக்கும் டெங்கு குடம்பிகளையும் டெங்கு நுளம்புகளையும் பிடித்துச் செல்கின்றார்கள்.
மேலும், நீர்தேங்கும் குழிகளை மூடிவைக்குமாறும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அற்புறப்படுத்துமாறும் ஆலோசனைகள், குறித்த டெங்கு சோதனை குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டன.
“தற்போது பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளமையால் டெங்கு நுளம்புகள் அதிகரித்துக் காணப்படலாம். அதற்காக முன்கூட்டியே, டெங்கு சோதனைகளை, பாடசாலைகள் முழுவதும் முன்னெடுத்து வருகின்றோம்” என்று, பிராந்திய சுகாதார பணிமனையின் உயரதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலைகள் முழுவதும் டெங்கு நுளம்பு உருவாகும் இடங்களை விசேட சிரமதானம் மூலம் சீர் செய்துகொள்ளுமாறு, சகல பாடசாலைகளின் அதிபர்களையும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago