2025 மே 10, சனிக்கிழமை

மட்டு. போதனா வைத்தியசாலை முடங்கியது

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளைக் கழிவுகளை அகற்றும் வரையில் அவசர சிகிச்சை நடவடிக்கைகளைத் தவிர, வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லையென, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அறிவித்தன.

வைத்தியசாலை அரசாங்க வைத்தியர் சங்கம், விசேட வைத்திய நிபுணர் சங்கம், தாதியர் மற்றும் ஊழியர் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து, ஊடகவியளார் சந்திப்பென்றை, இன்று (15) நடத்தினர்.

இதன்போதே, வைத்தியசாலையில் உள்ள தொழிற்சங்கங்கள் மேற்படி அறிவித்தன.

நேற்றுக் காலை தொடக்கம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரிவுகளின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் வைத்திய சேவையைப் பெற வருகைதந்த பெருமளவான பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக் கழிவுகளை, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்ட காணியில் புதைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அங்கு அக்கழிவுகளை கொண்டு சென்ற போது, அப்பகுதியிலுள்ள சில பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் அக்கழிவுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X