Princiya Dixci / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையால், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரனுக்கு ஆயர் இல்லத்தில் வைத்து நேற்று (17) ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
மாவட்டச் செயலாளராக கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், மதத்தலைவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளும் நோக்குடன், ஆயர் இல்லத்துக்கு விஜயம் மேற்கொண்ட மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரால் நினைவுப் பரிசும் ஆயர் பொன்னையா ஜோசப்பிற்கு வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தின்போது, மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026