எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மார்ச் 28 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாநகர சபை, மேயர் மற்றும் பிரதிமேயர் ஆகியோர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள சபையின் முதலாவது அமர்வில் தெரிவு செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபையில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாததால் முதலாவது அமர்வின் போதே மட்டக்களப்பு மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
38 உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சி 17 உறுப்பினர்களையும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 5 உறுப்பினர்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 4 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4 உறுப்பினர்களையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒரு உறுப்பினரையும் சுயேட்சைக் குழு-01, சுயேட்சைக்குழு - 02 மற்றும் சுயேட்சைக் குழு-04 ஆகியன தலா ஒரு உறுப்பினரையும் கைப்பற்றின.
எனினும் மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 17 உறுப்பினர்களைக் கொண்டுள்ள நிலையில், கூட்டமைப்பிலிருந்து மட்டக்களப்பு மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago