2025 ஜூலை 19, சனிக்கிழமை

மட்டு. மாநகர சபைக்கு சிவில் சமூகம் பாராட்டு

Editorial   / 2020 மே 08 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.டி. யூதாஜித்

கொரொனா அச்சத்திலிருந்து மட்டக்களப்பு மக்களைப் பாதுகாக்கும் பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு, மட்டக்களப்பு சிவில் சமுகத்தினர் தமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

நிலவும் கொரொனா அச்ச நிலமைகள் குறித்தும், இது தொடர்பில் மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மட்டக்களப்பு சிவில் சமுகத்தினர், மாநகர மேயர் தியாகராஜா சரவணபவனுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது, உலக நாடுகளில் மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் நோக்கில், அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபை, காத்திரமான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருவதாகவும், அதற்காக மட்டக்களப்பு வாழ் மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மட்டக்களப்பு சிவில் சமுகத்தினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X