2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மாநகர சபையை பூட்டி ஊழியர்கள் சத்தியாக்கிரகம்

Editorial   / 2019 ஜனவரி 29 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியோரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வரை தமது பணிப்புறக்கணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கோரிக்கை விடுத்து, மட்டக்களப்பு மாநகர சபையின் களப் பணியாளர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்தனர்.

மட்டக்களப்பு மாநகர முன் வாசலில் இன்று (29) காலை அமர்ந்து கொண்ட களப்பணி ஊழியர்கள், இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

மாநகர சபைக்குள் மாநகர மேயர், உறுப்பினர்கள்,  அலுவலர்கள் எவரையும் உள்ளே நுழைய விடாது, மாநகர சபையைப்  பூட்டிவிட்டே போராட்டத்தில் இவர்கள் குதித்தனர்.

இந்தப் போராட்டத்துக்கான காரணம் பற்றி களப்பணி ஊழியர்கள் கூறும்போது, மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவிலுள்ள நாவற்குடாப் பகுதியில், நேற்று (28) வீதி திருத்தப் பணிகளில் தமது ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அங்கு தர்க்கத்தில் ஈடுபட்ட குடியிருப்பாளர்கள் சிலர், தமது ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கியதன் விளைவாக, தாக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றனர்.

ஆனால், இந்த விடயம் குறித்து காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டோரைக் கைது செய்யவில்லை எனவும்  அதனால் எமக்குப் பாதுகாப்பும் நீதியும் கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது விடயமாக நடவடிக்கை எடுப்பதற்காக  காத்தான்குடிப் பொலிஸார் தாக்குதல் நடத்தியோரை அடையாளம் காட்டும்படி, மாநகர சபை ஊழியர்களைக் கேட்டு, நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .