2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மட்டு. மாவட்ட அதிகாரி, தாய்லாந்து விஜயம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 நவம்பர் 21 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசியிலுள்ள ஈரப்பதனை அளப்பது தொடர்பான அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்வதற்கு, அளவீட்டு அலகுகள நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து தெரிவான இருவரில் தமிழ் பேசும் ஒரேயொருவர் இவர் என்பதுடன்,  டிசெம்பர் 2ஆம் திகதி, இவர், தாய்லாந்து பயணமாகிறார்.

தாய்லாந்து, பட்டாயா நகரத்தில் டிசெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகும் இம்மாநாட்டில், 20 நாடுகளிலிருந்து தலா இருவர் வீதம் 40 பேர் பங்கு கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .