2025 மே 24, சனிக்கிழமை

’மட்டு. மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் டெங்கு’

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், டெங்குத் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தொற்றுநோய் மருத்துவ அதிகாரி டொக்டர் திருமதி தர்சினி தெரிவித்தார்.

கடந்த 7 மாத காலத்தில், இம்மாவட்டத்தில் 4,202 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டனரெனவும், அவர்களில் 8 பேர் பலியாகியுள்ளனரெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதத்தில் 1,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டபோதிலும், ஜூலை மாதத்தில் அத்தொகை சுமார் 200ஆகக் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர் என்பதுடன், ஏறாவூர், காத்தான்குடி ஓட்டமாவடி, ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X