2025 மே 10, சனிக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் டெங்கினால் உயிரிழப்புகள் குறைவு

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த எட்டு மாத காலத்தினுள்  டெங்கு நோயினால் எந்தவொரு உயிரிழப்புகளும் இடம்​பெறவில்லையெனவும் டெங்கு நோயின் தாக்கம் அம்மாவட்டத்தில் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும்  தெரிவித்த மட்டக்களப்பு தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வீ. குலராஜசேகரம்,  1005 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு  தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

 டெங்குத் தடுப்புத் தொடர்பாக அதனோடு தொடர்புபட்ட   செயற்பாடுகள் பற்றி  மட்டக்களப்பு தொற்றுநோய்த் தடுப்பு வைத்திய அதிகாரி வீ. குலராஜசேகரம் மேலும் தெரிவிக்கையில்,

திண்மக்கழிவு தரம் பிரித்தலில் உள்ளு​ராட்சி மன்றங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு, பொது சுகாதார பரிசோதகர்களும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளும்  சேர்ந்து தரம் பிரித்தல், பாதுகாப்பான முறையில் கழிவகற்றல்  போன்றவற்றை ஒருங்கிணைந்த கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக வைத்திய அதிகாரி வீ. குலராஜசேகரம் தெரிவித்தார்.

 இந்த விடயங்கள் தொடர்பாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த்; குறிப்பிடுகையில் மாவட்டத்தில் தற்போதைய காலநிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைச் சூழல்கள், பொது இடங்கள், வீடுகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் டெங்கு அவதானிப்பை செலுத்துவது அவசியம் என்றும் இதனை நிலைபேறான நடைமுறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்' எனவும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X