2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டு வவுணதீவில் கசிப்பு விற்றவர்களும் குடித்தவர்களும் கைது

கனகராசா சரவணன்   / 2020 மார்ச் 29 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட கசிப்பு குடிப்பதற்கு சென்ற 5 பேரை, நேற்று (28) இரவு கைது செய்துள்ளதாகவும் 7 லீற்றர் கசிப்பை கைப்பற்றியுள்ளதாகவும்  வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது, கன்னங்குடா பிரதேசத்தில் வீதிகளில் நடமாடிய மூவரை பொலிஸார் கைது செய்தபோது, அவர்கள் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த மூவருக்கும் கசிப்பு வழங்கிய வியாபாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X