2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மண் அகழ்வை ஒழிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும்  மண் அகழ்வை இல்லாமல் செய்யக் கோரி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவிக்கையில், 'உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்துக்குட்பட்ட ஆற்றுப்பாய்ச்சல் பகுதிகளில் இடம்பெறும் மண் அகழ்வை முற்றாக இல்லாமல்ச் செய்வதற்கு உரிய அதிகாரிகள் கவனத்திற்கொள்ள வேண்டும்' என்றனர்.

'மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மாவடியோடைப் பாலம் மற்றும் அதன் அணைக்கட்டுக்கான புனரமைப்பு வேலை, புவிச்சரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் தலையீடு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது' எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

'மாவடியோடைப் பாலத்துக்கான புனரமைப்பு வேலையானது மழைக்காலத்துக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படாவிடின், விவசாயிகள் பாரிய அழிவை எதிர்நோக்கும் நிலைமை ஏற்படும்' எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.  

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனிடம் விவசாயிகள் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X