Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச சபை பிரிவில் வீதிகளில் கட்டாக்காலிகளாக அலைந்து திரிந்த 40 மாடுகள் புதன்கிழமை (02) பிரதேச சபை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டதாக பிரதேச சபை வருமான பரிசோதகர் எம்.வசந்தகுமார் தெரிவித்தார்.
பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து புதன்கிழமை (02), ஒரு மாட்டுக்கு 5,000 ரூபாய் வீதம் 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,நிபந்தனையின் கீழ் மாடுகள் விடுவிக்கப்பட்டதாக பிரதேச சபை செயலாளர் திருமதி. ஜே.அருள்பிரகாசம் தெரிவித்தார்.
குறித்த பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்துள்ள கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தினால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருவதை கருத்திற்கொண்டு மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பிரதேச சபை செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் இம்மாடுகள் பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
1 hours ago