2025 மே 07, புதன்கிழமை

மணல் அகழ்வினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணல் அகழ்வு தொடர்பில் சட்டவரைபை உருவாக்கி அதன் மூலம் மணல் அகழ்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். அதுவரையில் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மணல் அகழ்வு நிறுத்தப்பட வேண்டுமென்று முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஆற்று மணல் அகழ்வு மற்றும் கிரவல் அகழ்வினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். பொதுமக்களின் தேவைக்காகவும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் தேவையான மணலை பெறுவதில் அதிக பணத்தை முகவர்களுக்கு கொடுக்கவேண்டியுள்ளது. இதற்கான காரணம் அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள மணல் அகழும் முகவர்கள் அதிக பணத்துக்கு வெளி மாவட்டங்களுக்கு மணல் விற்பனை செய்வதாக பாதிக்கப்பட்ட பொதுமக்களினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று   வெள்ளிக்கிழமை  கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதியமைச்சரினால் மேற்படி வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் வைத்துள்ள முகவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதிப்பத்திரங்கள் வைத்துக்கொண்டு மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.  

மணல், கிரவல்  ஆகியன அகழ்வதற்கு ஏற்ற இடங்கள் இனங்காணப்பட்டதோடு, இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறிமுறை பற்றியும் இங்கு ஆராயப்பட்டது,

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X