Princiya Dixci / 2021 ஜூன் 15 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தானை ஆற்றின் வடிச்சல் பகுதியில், அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர், இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் கீழ், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிகாலை 5 மணியளவில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்திய 4 உழவு இயந்திரங்கள் மற்றும் மணல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் மணல் சகிதம் கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
9 minute ago
25 minute ago
28 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
28 minute ago
48 minute ago