2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மத நிந்தனை; பொலிஸாரின் அறிவுறுத்தல் மீளப்பெறப்பட்டது

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள், வீடுகளில் காணப்படும் குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும், ஒரு மணித்தியாலத்துக்குள் அகற்றுமாறு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விடுத்த அறிவுறுத்தல், உடனடியாக மீளப்பெறப்பட்டுள்ளது.  

இவ்விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, பிரதிப் பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பெரேரா, ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் ஜயசுந்தர ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதையடுத்தே, மேற்படி அறிவுறுத்தல் மீளப்பெற்றப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .