2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மதுபானப் பாவனையை ஒழிக்கத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித், நாச்சியாதீவு பர்வீன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கும் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றபோதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைப்பாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர், மதுவரித் திணைக்கள ஆகியோர் இணைந்து செயற்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படும் போதைப்பொருள் பாவனை காரணமாக அங்கு வறுமை நிலவுவதுடன், மாணவர்கள் மத்தியிலும் தேவையற்ற பழக்கவழக்கங்கள் பரவுவதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, இம்மாவட்டத்திலுள்ள சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை நிலையங்களால் சீரழிவுகள் அதிகரித்துள்ளதுடன், அதிகளவான மதுபானச்சாலைகள் காரணமாக பெருமளவான  பணம் மதுபானச்சாலைகளுக்கு கிடைப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

மேலும், சில மருந்து விற்பனை நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் கடந்த காலத்தில் இவ்வாறான பல நிலையங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளன.  அவ்வாறான விற்பனை நிலையங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சுவரொட்டிகளை ஒட்டி பணத்தைச் செலவழித்;து விழிப்புணர்வு மேற்கொள்வதால், எந்தப் பலனும் கிடைப்பதில்லை. மதுபானச்சாலைகளை குறைப்பதன் மூலம் மதுபானப் பாவனையை ஓரளவுக்கேனும்; குறைக்கமுடியுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மதுபானப் பாவனையைக் குறைக்கவேண்டுமென்று கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போதிலும், அக்கோரிக்களை சரியான முறையில் முன்னெடுக்க முடியவில்லையென கிராமியப் பொருளாதாரப்  பிரதியமைச்சர்  எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X