2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மதுப்பாவனை காரணமாக புனர்வாழ்வளிக்கப்பட்டோருக்காக தொழிற்பயிற்சி நிலையம்

Suganthini Ratnam   / 2016 மே 08 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மதுபானப் பாவனைக்கு அடிமையாகி உடல், உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களின் நலன் கருதி சுமார் 64 இலட்சம் ரூபாய் செலவில் தொழில் பயிற்சிக்கூடம் மட்டக்களப்பு, மாவடிவேம்பு புனர்வாழ்வு நிலையத்தில் உருவாக்கப்படவுள்ளது.  

அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதி உதவியுடன்  நவீன வசதிகள் கொண்டதாகவும் ஒரே நேரத்தில் சுமார் 50 பேர் தொழில் பயிற்சி பெறும் வகையிலும்  இந்த தொழில் பயிற்சிக்கூடம் உருவாக்கப்படும் என மாவடிவேம்பில் 'ஆரோக்கியப் பாதை' என்ற பெயரில் இயங்கும் உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி.ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இயங்கி வருகின்ற இந்த நிலையத்தில் மதுபானப்  பாவனைக்கு அடிமையாகி உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்ட இருபாலாரும் சிகிச்சை பெறுகின்றனர்.

சிகிச்சை பெற்று வெளியேறுவோர் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொழில் பயிற்சி பெற புதிய தொழில் பயிற்சி நிலையம் ஊடாக வாய்ப்புக் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

தற்சமயம் இந்த வைத்தியசாலையில் சுமார் 20 பேர் உடல்,; உளச் சிகிச்சை பெறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X