2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மதகுருவால் பண வசூலிப்பு; விசாரணை நடத்துமாறு உத்தரவு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூன் 07 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடியில் மதகுரு ஒருவர், வீடுகளில் பண வசூலில் ஈடுபட்டு வருவது குறித்து விசாரணை நடத்துமாறு, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராச்சி, காத்தான்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடியில் கடந்த சில தினங்களாக மேற்படி மதகுரு உட்பட மூவர், பண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதரவற்றவர்களைப் பராமரிப்பதற்காக நன்கொடை பெறுவதாகக் கூறியே, இவர்கள் பண வசூலிப்பில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கான பற்றுச்சீட்டு ஒன்றையும், இந்த மதகுரு வழங்கியுள்ளார்.

இந்தப் பண வசூலிப்பில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சமூகச் செயற்பாட்டாளரும் வர்த்தகருமான எம்.கே.கலீல் ஹாஜியார் என்பவர், மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

குறித்த மத குரு, வட மத்திய மாகாணத்தில் நடத்தி வந்த ஆதரவற்றோருக்கான சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்கள் மூடப்பட்டு விட்டனவெனவும், இவர் பொய்யைக் கூறி பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்ததையடுத்தே, இவ்விடயத்தை, பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததாக, கலீல் ஹாஜியார் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த நடவடிக்கை தொடர்பில் குறித்த மதகுருவை விசாரணை செய்யுமாறு, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி உத்தரவிட்டுள்ளார்.

வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த குறித்த மதகுரு, காத்தான்குடியிலுள்ள பல வீடுகளுக்கும், ஓட்டோவில் சென்று பண வசூலில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X