2025 மே 08, வியாழக்கிழமை

​மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2021 ஜூன் 17 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

பயணக் கட்டுப்பாட்டை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவரை, மட்டக்களப்பு  குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் சேத்துக்குடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 30 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X