2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மத்ரஸாவில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்

Janu   / 2023 டிசெம்பர் 06 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் செவ்வாய்க்கிழமை (5)  இரவு  மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) மாணவன்  தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததால் சில மாணவர்கள் அவரை தேடியபோது மலசல கூடத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும்  உறவினர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும்  இச் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை அவசியம் எனவும்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பாறுக் ஷிஹான் , ரீ. எல். ஜவ்பர்கான் , நூருல் ஹுதா உமர்  , ஏ.எஸ்.மெளலானா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .