Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 15 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க மீன்பிடிக் கூட்டுத்தாபனச் செயற்பாட்டை மறுசீரமைத்து, வினைத்திறன் மிக்கதாக இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்முனை வடக்குப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.
இதன்போது, மேற்படி கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயம் இயங்குவதில்லை என்பதுடன், இங்கிருந்த ஐஸ் தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. ஆயினும், தனியார் ஐஸ் தொழிற்சாலைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்தார்.
அதிகளவான மீனவர்களைக் கொண்டதும் நாட்டின் தேசிய உற்பத்திக்கு மீனை பெருமளவில் பங்களிப்புச் செய்வதுமான இம்மாவட்ட மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடு மோசமடைந்துள்ளது.
மீனவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இயங்கிவந்த இந்தக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் விளக்கம் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், இம்மாவட்ட மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை வினைத்திறன் மிக்கதாக இயங்கச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனக் கூறினார்.
8 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago