2025 மே 08, வியாழக்கிழமை

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 350 முறைப்பாடுகள்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
இந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுமார் 350 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

மனித உரிமைகள் தினமான நேற்று வியாழக்கிழமை மாலை  சூரியா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இந்நிகழ்வின்போது, பெண்களின் உரிமைகள் மீறப்படுவதை கண்டித்து மெழுகுவர்த்திகள் ஒளிரச் செய்து கைகளில் வெள்ளை நிறப்பட்டியும் கட்டப்பட்டன.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில்  கடந்த காலத்தில் முறைப்பாடுகள் செய்வதற்கு பலர்; முன்வருவதில்லை. ஆனால், தற்போது அச்சமின்றி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X