2025 மே 07, புதன்கிழமை

மனுவில் ஒப்பமிடும் பணி

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 08 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

புதிய ஆசிரியர் பிரமாணக் குறிப்பின்படி ஆசிரியர் சேவையில் தரம் உயர்வை முறையற்றதாக்குவதற்கும் காலதாமதமாக்குவதற்கும் எதிராக கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் மனுவில் ஒப்பமிடும் பணி ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்  செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கையெழுத்துப் பெறும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'புதிய ஆசிரியர் பிரமாணக் குறிப்புக்கமைய தரம் உயர்வோ, சம்பள நிலுவையோ இதுவரையும் கிழக்கு மாகாணத்தில் கடமையிலுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.
அத்துடன், சம்பள முறைப்படுத்துவதிலும் குளறுபடிகள் நிறைந்துள்ளன. கடந்த தேர்தல்க் காலத்தில் கல்வியுடன்  சம்பந்தப்பட்ட விடயங்களில் கூறப்பட்ட வாக்குறுதிகள் பேச்சளவில் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதால், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாகாணக் கல்வியதிகாரிகளும் மந்தகதியில் செயற்படுகிறார்கள்.

இந்நிலைக்கு எதிராக தொழிற்சங்க நிலைப்பாட்டை  முன்னெடுப்பதற்கு முன்னர், முதற்ச் செயற்பாடாக கையொப்பத்துடன் கூடிய மனுவை கல்வியமைச்சருக்கு சமர்ப்பிப்பதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களிலும் மனுவில் கையொப்பமிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இம்மாகாணத்திலுள்ள சகல ஆசிரியர்களும் மனுவில் கையொப்பமிடுமாறு கேட்கப்படுகின்றனர். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 077-2529277 என்ற அலைபேசியூடாக தொடர்புகொள்ள முடியும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X