2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மனக்குமுறல்களை ஆயர் கேட்டறிந்தார்

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உன்னிச்சைக்குளம் மடை திறந்ததால் ஏற்பட்ட நீரோட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மனக்குமுறல்களை, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜேசெப் கேட்டறிந்தார்.

விவசாயிகளின் அழைப்பையேற்று, ஆயித்தியமலைப் பகுதிக்கு நேற்று (10) விஜயம் செய்திருந்த ஆயர், அவர்களது துயரங்களைக் கேட்டறிந்து கொண்டாரென, உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.

உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள், கடந்த 24ஆம் திகதி சடுதியாகத் திறக்கப்பட்டதன் காரணமாக, உன்னிச்சை நீர்ப்பாசனக் குளத்தை அண்டிய சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X