Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 16 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வந்தாறுமூலை மயானத்திலுள்ள ஈமக்கிரியைகளை நடத்தும் இளைப்பாறும் மண்டத்தில், 82 வயதுடைய கணபதிப்பிள்ளை தங்கராஜா என்பவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று சடலமாக மீட்டுள்ளனர்.
வழமையாக சித்திரைப் புத்தாண்டு தினத்தில் மனைவியின் கல்லறையைப் பார்த்து விட்டு அங்கே அமர்ந்திருந்து மனைவிக்காக ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து விட்டு வரும் இவர், இம்முறை மனைவியின் கல்லறையுள்ள மயானத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, செங்கலடி - ஏறாவூர் எல்லையில் அமைந்துள்ள தனியார் கட்டிடம் ஒன்றிலிருந்து தற்கொலை செய்து கொண்ட 43 வயதான விஜயரத்ன வீரசிங்ஹ முதியான்ஸலாகே டக்ளஸ் என்பரின் சடலமொன்றையும் ஏறாவூர் பொலிஸார் மீட்டுள்ளனர்.
வெலிமடை அம்பகஸ்வெவ, எல்லம்பலம, ஜயலகம பகுதியைச் சேர்ந்த இவர் தனியார் கம்பனி ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் இவ்விரு சம்பவ இடங்களுக்கும் சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளதோடு அந்தச் சம்பங்கள் குறித்த மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
கழுத்தில் சுருக்கிட்டு இவ்விரு தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago
4 hours ago