2025 மே 09, வெள்ளிக்கிழமை

மயானத்தில் சிறுமி துஷ்பிரயோகம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பதினைந்து வயதான சிறுமியை மயானமொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குடும்பஸ்தர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம். றியாழ், செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.

முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த ஆறுமுகம் நிர்மலராஜ் (வயது 32) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.

குறித்த நபர், மேற்படி சிறுமியை முறக்கொட்டான்சேனைப் பகுதியிலுள்ள மயானம் ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த நபரை திங்கட்கிழமை (21) இரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X