2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மயங்கிய சிறுமி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 24 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இரவு நித்திரைக்குச் சென்றபோது மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை, பனிச்சங்கேணியைச் சேர்ந்த அந்தோனி அனிஸ்ரா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெற்றோரால் கைவிடப்பட்ட மேற்படி சிறுமி வாழைச்சேனை விபுலாநந்தபுரத்திலுள்ள பாட்டியின் பராமரி;ப்பில் இருந்து வந்துள்ளார். இதன் பின்னர் பெண்கள் இல்லத்தில் மேற்படி சிறுமி சேர்க்கப்பட்டு இந்த இல்லத்தில் இருந்தவாறு தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

படிப்பில் திறமையான இந்த சிறுமி அடிக்கடி மனச் சோர்வடைந்து குழம்பிக்கொள்வதால், தனக்குத்தானே காயப்படுத்திக் கொள்வதாகவும் சிறுமிக்கு ஏற்கெனவே வைத்திய ஆலோசனை பெற்றதாகவும் பாட்டி தெரிவித்துள்ளார். அவ்வாறிருக்கும்போது வியாழக்கிழமை இரவு நித்திரைக்;குச் சென்று மயங்கிய நிலையில் சிறுமி மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X