Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாததால் நீண்டகாலமாக இருந்து வந்த சர்ச்சை, ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதின் பிரகாரம் விரைவான தீர்வு கிட்டியுள்ளதாக, தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இன்று (23) அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் கத்தோலிக்கரல்லாத (NonRC) கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த பிரிவினருக்கென தனியான மயானம் இல்லாததால் அவர்கள் மரணிக்கும் தமது உறவினர்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் பல்வேறு மனித உரிமை மீறல் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து இந்த விடயத்தை மாவட்ட சர்வமதப் பேரவையின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.
“குறிப்பாக மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இப்பிரச்சினை நெருக்கடியைத் தோற்றுவித்து முரண்பாடுகள் உருவாகுவதற்கு காரணமாய் அமைந்து விட்டிருப்பதாகவும் ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
“கிராமங்கள் தோறும் உள்ள 'பொது மயானங்களில்' தமது கத்தோலிக்கரல்லாத மதப் பிரிவைப் பின்பற்றும் நபர்களது உடல்களை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கப்படுவதால், அப்பிரதேச செயலகத்தைத் தவிர்த்து வேறொரு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சுமார் 40 கிலோமீற்றர் தூரம் உடல்களை எடுத்துச் சென்று இறுதிக் கிரியைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
“இது தமக்கு மானசீகமான பல்வேறு உடல் உள ரீதியான தாக்கங்களையும், பொருளாதார இழப்புக்களையும் மனித உரிமைகள் பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளதனால் இப்பிரச்சினைக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்று, பாதிக்கப்டுவோர், மாவட்ட சர்வமதப் பேரவையிடம் கேட்டிருந்தனர்.
“இதுபற்றி சர்வமதப் பேரவை, கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததின் பிரகாரம், இவ்விடயத்தில் பிரதேச செயலாளர் எடுத்துக் கொண்ட நடவடிக்கை பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் பிரதேச செயலாளரைப் பணித்திருந்தார்.
“அதன்பிரதிபலனாக வாகரைப் பிரதேச செயலளார் பிரிவிலுள்ள கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மதப்பிரிவுகளைப் பின்பற்றுவோரின் நலன்கருதி, வாகரைப் பிரதேசத்தில் மயானத்துக்கு இடம் அடையாளம் காணப்பட்டள்ளதாக வாகரைப் பதில் பிரதேச செயலாளர் கே. தனபாலசிங்கம் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
“அந்தக் கடிதத்தில் வாகரையில் Non RC கிறிஸ்தவர்களுக்கான சேமக்காலை வழங்குவது தொடர்பாக, தங்களது கடிதம் சார்பாக வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகரை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கணுக்காமடு எனும் கிராமத்தில் 40ஆம் கட்டைக்கு அருகில் மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஒரு ஏக்கர் நிலம் இனங்காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.
இக்காணியை அரச சட்டத்தின் கீழ் பாராதீனம் செய்வதற்கான ஏனைய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
45 minute ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
20 Jul 2025