Kogilavani / 2016 ஜனவரி 05 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மருந்துக் கடை ஒன்றில் பணம் திருட்டுப் போன சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 20 மற்றும் 23 வயதுடைய இருவரை, ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை(4) கைதுசெய்துள்ளனர்.
கடந்த டிசெம்பெர் 22 ஆம் திகதி இரவு, ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மருந்தகத்தின் கூரையை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த திருடர்கள், பணப்பெட்டியில் இருந்த சுமார் ஐந்து இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தையும் 21 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளையும் திருடிச் சென்றதாக முறையிடப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்று வந்த விசாரணையின் அடிப்படையிலே மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago