Editorial / 2020 மே 13 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்துக்குச் சொந்தமான பொத்தானை பகுதியில், சட்டவிரேத மரக் கடத்தலொன்று, இன்று (13) முறியடிக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என, வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
இதன்போது, சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான பனிச்சை, பாலை, மதுரை என மூன்று வகையான வெட்டப்பட்ட துண்டு மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொத்தானை பகுதியில், அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் இருந்த மேற்படி மரத் துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, வட்டார வன உத்தியோகத்தர்களின் உதவியுடன், சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டாரென, வன உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago