2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மரங்களை அழிப்பதாக மின்சார சபையினருக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2020 மே 26 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பயன்தரும் மரங்களை, இலங்கை மின்சார சபையினர் கண்டபடி அழித்து சேதம் விளைவிப்பதாக, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தங்கமுத்து ஜயசிங்கம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கரிசனையை எடுக்குமாறு, இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் செங்கலடி பாவனையாளர் நிலையத்தையும் மட்டக்களப்பு தலைமைக் காரியாலயத்தையும் தான் கேட்டுள்ளதாகவும் ஆனால், இதுவரை அவர்கள் தனது முறைப்பாடு குறித்து கரிசனை கொள்ளவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த முன்னாள் உபவேந்தர் ஜயசிங்கம், “இம்மாதம் 19ஆம் திகதி ,இலங்கை மின்சார சபையின் கொந்தராத்துக் காரர்கள் எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட 6 இளைஞர்கள், எனது வீட்டு வளாகத்திலுள்ள மா, வேம்பு, முருங்கை, கத்தா போன்ற பயன்தரும் மரங்களை மூர்க்கத்தனமாக வெட்டி அழித்தனர்.

“ நான் ஒரு தாவரவியல் பேராசிரியராகவும் உள்ளதால் இயற்கையை அழிப்பது குறித்து நான் பெரிதும் வேதனை கொண்டுள்ளேன்.

“மேலும், அவர்களால் வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள், அழகுத் தாவரங்கள் என்பன வெட்டி அழித்தவர்களாலோ நகர சபையினாலோ இன்னமும் அகற்றப்படாமல் அவ்விடத்திலேயே கிடக்கின்றன.

“இயற்கைக்குக் கேடு விளைவிக்கும் இச்செயல் குறித்து இலங்கை மின்சார சபை கரிசனை கொள்ள வேண்டும்.

“மின் கம்பிகளுக்கு அருகிலுள்ள மரக்கிளைகளைக் கத்தரிப்துபற்றி கேள்வி எழுப்பத் தேவையில்லை. ஆயினும், அக்கம்பக்கத்திலுள்ள மரங்களை மூர்க்கத்தனமாக அடியோடு வெட்டி அழிப்பது குறித்து கரிசனை கொள்ளாமல் இருக்க முடியாது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X