2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 மே 08 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், சகா

கொரோனா தொற்று வேகமாக நாட்டில் பரவி வரும் இந்தச் சந்தர்ப்பத்தில், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நேற்று (07) பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.

அகிலன் அறக்கட்டளை  தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில், லண்டன் அகிலன் அறக்கட்டளையின் ஸ்தாபகர் கோபாலப்பிள்ளை, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன், மட்டக்களப்பு பிராந்திய பதில் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எஸ்.நவலோஜிதன், கல்முனை பிராந்திய தொற்றுநோய்க்கான பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் என். ஆசிப், இலங்கை அகிலன் அறக்கட்டளை ஸ்தாபகர் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, இந்த உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

உடல் வெப்பநிலையை அளவிடும்  15 கருவிகள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனைக்கு 10 கருவிகளும் இதன்போது வழங்கப்பட்டன.

அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள சுகாதார நிலையங்கள் (MOH), தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு 15,000 ரூபாய் பெருமதியுடைய உடல் வெப்பநிலையை அளவிடும்  25 கருவிகளும் வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .