Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூலை 16 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, பூநொச்சிமுனைபிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்
மட்டக்களப்பு பூநொச்சிமுன பச்சை வீட்டு திட்டத்திலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை (15) இரவு சுமார் 8.45மணி யளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்த சம்பவத்தையடுத்து ஸ்தலத்துக்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் , விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டனர்
கூரையிலிருந்து தரையில் வந்து விழுந்த ஒரு பொருள் வெடித்து பின்னர் அது புகையாக கிளம்பியதாக குறித்த வீட்டில் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்
இந்த சம்பவத்தினால் குறித்த வீட்டுக்கு பாரிய சேதங்கள் ஏற்படாத நிலையிலும் பாரியளவிலான சப்தம் மிக நீண்ட தூரத்துக்கு கேட்டதாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எம். எஸ். எம். நூர்தீன், ரீ.எல். ஜவ்பர்கான்
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago