2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மர்மமான முறையில் குடும்பப் பெண் மரணம்

வடிவேல் சக்திவேல்   / 2017 ஒக்டோபர் 07 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய வீதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய  அகிலேஸ்வரன் புஸ்ப்பராணி என்பவரே, இன்று (07) காலை மர்மமான முறையில் உயிரிந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த பெண்ணின் குழந்தையின் பலத்த அழுகுரலை அவதானித்த வீதியில் சென்றவர்கள், உள்ளே சென்று பார்த்தவுடன் குறித்த குழந்தையின் தாய் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள், பொலிஸாருக்கு வழங்கி தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவரும், அவரது தாயும் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் நிலையில், மேற்படி பெண்ணும் அவரது 5 வயதுடைய பெண் குழந்தையும், பெண்ணின் தந்தையும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

வெல்லாவெளியில் அமைந்துள்ள அவர்களது உறவினர்களின் வீட்டுக்கு, நேற்று (06) தந்தை சென்றுள்ள நிலையிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X