2025 மே 02, வெள்ளிக்கிழமை

‘மலையக மக்களுக்கு ரூ.1,000 வழங்கினால் ஆறுமுகனின் ஆத்மா சாந்தியடையும்’

Editorial   / 2020 மே 31 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை உடன் வழங்கும் போதுதான்  அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஆத்மா சாந்தியடையுமென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

அவரது கட்சி சார்பாக மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, மட்டக்களப்பு வாவிக் கரையிலுள்ள கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதில் கட்சியின்   மத்திய குழுவினர்,  கட்சி உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்  பலர் கலந்துகொண்டு, மறைந்த ஆறுமுகன் தொண்டாமானின் உருவப்படத்துக்கு, சுடரேற்றி, மலர் தூவி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். 

இதன்போது   அங்கு உரையாற்றிய பூ.பிரசாந்தன், மலையக மக்களின் சம்பளம் உள்ளிட்ட அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தமது கட்சி உறுதுணையாக இருக்குமென்றார்.

மேலும், அன்னாரின் பிரிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கும் மலையக மக்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சார்பாகவும் தமது கட்சியின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X