Suganthini Ratnam / 2016 மே 17 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்கின்ற அடை மழை காரணமாக மாவட்டத்திலுள்ள சில பிரதான நீர்ப்பாசனக் குளங்களில்; நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.
இதனை அடுத்து உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் இரண்டு அடிக்கு திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சந்திரசேகரன் நிறோஜன் தெரிவித்தார்.
உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 24 அடியிலிருந்து 28அடி 2 அங்குலமாக அதிகரித்துள்ளது. உறுகாமக் குளத்தின் நீர்மட்டம் 11 அடி 9 அங்குலத்திலிருந்து 16 அடி 5 அங்குலமாகவும் அதிகரித்துள்ளதுடன், 4 அங்குலம் வான்பாய்கின்றது. வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 18 அடி ஒரு அங்குலமாக அதிகரித்துள்ளது.
மாவடியோடை வான்கதவுடன் கூடிய பாலத்தின் நிர்மாண வேலை முடிவடையாமையால்,
நீர் வழங்குவதற்காக மாவடியோடை ஆற்றை மறித்து அமைக்கப்பட்ட மணல் அணை வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்துள்ளது. முந்தனை ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததை அடுத்து ஆற்றை மறித்து அமைக்கப்பட்ட கிரான்புல்ச்Nனை அணை உடைப்பெடுத்துள்ளது.
5 minute ago
21 minute ago
24 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
24 minute ago
44 minute ago