Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 07 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், ஆர்.ஜெயஸ்ரீராம்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே குரோதத்தை ஏற்படுத்தி, இனவாதத்தைத் தூண்டி, நாட்டில் சமூக உறவைக் குலைத்து வைத்துள்ளார்” என, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தை நேற்று (06) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதியின் குரோத மனப்பான்மை செயற்பாடுகளுக்கு இடம்கொடுக்காமல் செயற்படவே, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன், நாங்களும் வெவ்வேறு கட்சிகள் என்று வேறுபாடு பார்க்காமல், ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிங்கள மக்களிடையே சமூக விரோதச் செயல்களைத் தூண்டியும் ஏனைய இன மக்களிடையே பயங்கரவாதச் செயற்பாடுகளையும் தூண்டிச் செயற்பட்டு வருகின்றார்.
“மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல், நாட்டை பாதுகாப்போம்.இந்த நாட்டில் இனவாதக் கருத்துகள் இடம்பெற இடமளிக்கமாட்டோம். எல்லா இனத்தவர்களிடையேயும் இவ்வாறான இனவாதக் கருத்துகள் பேசுபவர்கள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். அரசியல்வாதிகளே பிரச்சினைகளை ஏற்படுத்தி, இலாபம் அடைய முற்படுகின்றனர். எனவே, இவற்றுக்கெல்லாம் நாம் செவிமடுக்காமல், குழப்பமின்றி வாழவேண்டும்.
“கடந்த காலத்தில், வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள், ஓர் அச்ச சூழ்நிலையிலேயே இருந்து வந்தனர். சுயமாகவும் சுதந்திரமாகவும் செயற்படமுடியாத நிலையே, மஹிந்த ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இருந்தது. மூன்று இன மக்களுக்கும் பழிவாங்கப்பட்டனர்.
“ஆனால், அந்த நிலை இன்று மாற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மை சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், சிறுபான்மை சமூகங்களும் அனுபவிக்க வேண்டும் என்பதை, இந்த அரசாங்கம் நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது.
“புதிய அரசமைப்பு ஊடாக, இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளோம். இதன் ஊடாக, இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றோம்” என்றார்.
மேலும், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யுத்தத்துக்குப் பின்னர் இந்த நாட்டு மக்களுக்கு செய்த அநியாயத்தினால்தான், நான் தனிக்கட்சி அமைத்து அரசியலுக்கு வந்தேன்.
“நான் அமைத்த அரசியல் கட்சியைக் கலைத்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியில் 2015ஆம் ஆண்டு இணைந்து, இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகின்றேன்” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago