Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படுமெனவும் அதன்படி, கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் மிக விரைவில் நடத்தப்படுமெனவும் அதற்கான அழுத்தங்களை தாங்கள் வழங்கியுள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
ஆற்றல் பேரவையும் பிரதேச அபிவிருத்தி வங்கியும் இணைந்து நடத்திய சிறுவர் தின நிகழ்வு, ஆரையம்பதி சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரசாந்தன், 2017ஆம் ஆண்டுப் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த அரசாங்கம் இழைத்த மோசமான தவறின் காரணமாக, அந்த அரசாங்கத்துடன் இணக்க ஆட்சி நடத்திய தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுக்காததன் காரணமாக, இன்றுவரை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தள்ளிச் செல்கின்றது” என்றார்.
“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது, அது தேவையற்றது எனப் பலரும் பல கருத்துகளை சொல்கின்றனர். யார் என்ன கூறினாலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அரசாங்கமும் கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மாகாண சபைத் தேர்தல்கள் மிக விரைவில் நடத்தப்பட வேண்டுமென மிகத் தெளிவாக இருக்கின்றன.
“மாகாண சபைத் தேர்தலை நடத்துகின்ற போதுதான், மாகாணத்துக்குரிய பாடசாலைகள், வைத்திய சேவைகள், சிறுவர்களுக்கான நலனோம்பல் நடவடிக்கைகள், உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியொதுக்கீடுகள் என அனைத்தையும் மேற்கொள்ள முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025