2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மாகாண மல்யுத்த போட்டியில் முதலிடம்

Princiya Dixci   / 2021 மார்ச் 24 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

கிழக்கு மாகாண 46ஆவது விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில் மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய மாணவன் தங்கப் பதக்கத்தைப் பெற்று, தேசிய மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

இப்பாடசாலையில், தரம் 11இல் கல்வி கற்கும் சி.ஜெயசுதன் என்ற மாணவனே தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதுடன், அதே வகுப்பில் கல்வி பயில்கின்ற இ.நிரோஜன் இரண்டாம் இடத்தைப் பெற்று, வெள்ளப் பதக்கத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் அதிபர் க.தியாகராசா வழிகாட்டலில், வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ந.நிசோத் இவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X