2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாணவர்களின் புத்தகப்பைகள் சோதனை

Freelancer   / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் பொலிஸார் போதைப்பொருளை தடுப்பதற்காக விசேட நடவடிக்கையாக, பாடசாலை மாணவர்களை வியாழக்கிழமை (15) சோதனைக்கு உட்படுத்தினார்கள்.

புனித மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் மோப்பநாய்கள் சகிதம் மாணவர்களின் புத்தகப்பைகளைச் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்த ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.பி ஹட்டியாராச்சி தலைமையில் நேற்று காலை 6.30 மணிக்கு, புனித மைக்கல் பாடசாலையின் வாசலில், சோதனை
நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனை நடவடிக்கை, ஏனைய பாடசாலைகளிலும் தொடரும் எனவும் மாணவர்கள், பெற்றோர்கள் போன்றோர் போதைப்பொருள் வியாபாரிகள், பாவிப்பவர்கள் தொடர்பாக அறிந்திருந்தால், உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியத்தருமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .