Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வா.கிருஸ்ணா / 2018 மே 30 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி, மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலை மாணவர்கள் இணைந்து, கவனயீர்ப்புப் பேரணியுடன், சிரமதான நடவடிக்கையையும், இன்று (30) காலை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு, மாவட்ட சுற்றாடல் அதிகாரசபையும் கல்வி வலயமும் இணைந்து இவற்றை முன்னெடுத்திருந்தன.
மட்டக்களப்பு நகரிலுள்ள ஆறு பாடசாலை மாணவர்கள் இணைந்து, வெள்ளைப்பாலம் பகுதி, வாவிக்கரையைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலின் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து, நகர் ஊடாக புனித சிசிலியா பெண்கள் உயர் தேசிய பாடசாலை வரையில் ஊர்வலம் சென்றனர்.
இதன்போது, சூழலைப் பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வுப் பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்ததுடன், “சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்” என்ற கோஷங்களையும் எழுப்பினர்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago