2025 மே 17, சனிக்கிழமை

மாமாங்க ஆலயத்தில் ஆளுநரின் பிறந்ததினம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா. கிருஸ்ணா, அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, தனது 64ஆவது பிறந்ததினத்தை, மட்டக்களப்பு மாமாங்க ஆலயத்தில் இன்று (06) விசேட பூஜையில் ஈடுபட்டுக் கொண்டாடியுள்ளார்.

இவ்வழிபாட்டில், கிழக்கு ஆளுநரின் பாரியார் தீப்தி போகொல்லாகம, புதல்வி டொக்டர் டில்சானி போகொல்லாகம, ஆளுநர் அலுவலக அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றுள்ளனர்.

இது தொடர்பாக ஆளுநரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் தெரிவித்துள்ளார்.

1954இல் குருநாகலில் பிறந்த கிழக்கு மாகாண ஆளுநர், முன்னாள் வெளிவிவகார அமைச்சராகவும் வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .